இரு பிள்ளைகள் மீது ஏற்பட்ட ஏக்கத்தினால் விளைந்தது

கோலாலம்பூர் , அக்டோபர் 28-

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ரவாங், கம்போங் புங்கா ராய- வில் இரண்டு வயது ஆண்டு குழத்தையை கடத்த முயற்சி செய்ததாக உள்ளூர் மக்களால் வளைத்துப்பிடித்து, கட்டிப்போடப்பட்டு, போலீசாரிம் ஒப்படைக்கப்பட்ட நேபாளப் பிரஜை, தனது இரு பிள்ளைகள் மீது கொண்ட ஏக்கத்தினால் அவ்வாறு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

புத்திசுவாதீனமற்றவராக இருக்கக்கூடும் என்று நம்பப்படும் 38 வயதுடைய அந்த அந்நிய ஆடவர், மனநல சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ மாட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹம்மது நோர் குறிப்பிட்டார்.

நேபால் நாட்டில் தனத இரு பிள்ளைகளை பிரிந்து மலேசியாவில் வேலை செய்து வரும் அந்த நபர், பிள்ளைகள் மீது கொண்டிருந்த பாசத்தினால் அவ்வாறு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நோன்புப்பெருநாளில் போது தாயகத்திற்கு திரும்பிய அந்த அந்த நேபாளிய பிரஜை, மலேசியா வந்தப் பின்னர் தொடர்ந்து தனது இரு பிள்ளைகளுக்காக ஏங்கித் தவித்து வந்ததாக கூறப்படுகிறது என்று ஓர் அறிக்கையில் முகமட் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS