டெமெர்லோ,அக்டோபர்
சீனாவின் முதலீட்டு ஆலோசகராக மசீச தேசியத் தலைவர் டத்தோ செரி வீ கா சியோங்- கை நியமனம் செய்திருப்பது அவரின் மதிப்பைக் குறைப்பதாக அர்த்தமாகாது என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
வீ கா சியோங்கிடம் உள்ள ஆற்றலையும், அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து இப்பதவி வழங்கப்பட்டதாக அகமட் ஜாஹிட் விளக்கம் அளித்துள்ளார்.
பாரிசான் நேஷனலின் உறுப்புக்கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் முன்னாள அமைச்சர் என்ற முறையில் வீ கா சியோங்கை கெளரவிக்கும் வகையில் தாமும், அவரும் ஒப்புக்கொண்ட பிறகே அவருக்கு அப்பதவி வழங்கப்பட்டதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.
சீனாவில் இருந்து மலேசியாவுக்கு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு மலேசிய Halal- மன்றத்தின் தலைவர் என்ற முறையில் தமக்கு உதவி செய்யும் வகையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டதாக துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் விளக்கம் அளித்தார்.