முன்னணி வழக்கறிஞர் மன்ஜீத் சிங் தில்லான் காலமானார்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 28-

நாட்டின் முன்னணி கிரிமினல் வழக்கறிஞரும், மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான மன்ஜீத் சிங் தில்லான் காலமானார். அவருக்கு வயது 82. கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாராவில் உள்ள தமது இல்லத்தில் மன்ஜீத் சிங் தில்லான் தமது இறுதி மூச்சை விட்டார்.

பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டை உலுக்கிய கோடீஸ்வரி டத்தோ சோசிலாவதி லாவியா கொலை வழக்கு,, மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கு உட்பட பிரபலங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் மன்ஜீத் சிங் தில்லான் ஆஜராகியிருந்தார்.

நாட்டின் சட்டத்துறை அலுவலகமான AG அலுவலகத்தில் பணியாற்றிய மன்ஜீத் சிங் தில்லான், 70 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த வழக்கறிஞர் நிறுவனத்தை நிறுவி, முன்னணி கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

WATCH OUR LATEST NEWS