ஈப்போவில் லிட்டில் இந்திய மேம்பாட்டிற்கு மானியம்

பேராக்,அக்டோபர் 28-

பேரா மாநிலத்தில் இந்தியர்களின் முக்கிய வர்த்தகப்பகுதியான ஈப்போ லிட்டில் இந்தியாவின் மேம்பாட்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்ச்ர ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஈப்போ லிட்டில் இந்தியா, இந்தியர்களின் பாரம்பரிய வர்ததகப் பகுதி என்பது மட்டுமின்றி மாநிலத்தின் முக்கிய சுற்றுலாப்பகுதியாகவும் விளங்குகிறது.

மாநிலத்தில் சுற்றுப்பயணிகளை கவரும் இடமாக லிட்டில் இந்தியா திகழ்வதால் வருகையாளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற கழிப்பறைகளை அமைப்தபற்கு ஒரு லட்சம் ரிங்கிட்டும், நுழைவாசல் முகமப்பிடத்தில் அலங்கார வளைவையும், வண்ண விளங்குகளையும் பொருத்த 50 ஆயிரம் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS