தீபாவளி திருநாளை முன்னிட்டு 2 தினங்களுக்கு டோல் கட்டணம் இலவசம்

ஜோகூர் பாரு ,அக்டோபர் 28-

வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று திங்கட்கிழமை பின்னிரவு 12.01 மணிக்கு தொடங்கி, வரும் அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமை முன்னிரவு 11.50 மணி வரையில் இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுப்பணித்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

இந்த இலவச டோல் கட்டண விலக்களிப்பில் ஜோகூர் பாலம், Bangunan சுல்தான் இஸ்கந்தர் மற்றும் ஜோகூர். தஞ்சூங் குபாங், லெபுஹ்ரயா லிங்கெடுவா ஆகியவை இடம்பெறவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

தீபாவளியையொட்டி இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணம் இலவசம் அறிவிக்கப்பட்டது மூலம் 3 கோடியே 80 லட்சம் வெள்ளியை நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய மடானி அரசாங்கத்தின் கோட்பாட்டிற்கு ஏற்ப விழா காலங்களில் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைப்பது மற்றும் இனங்களுக்கு இடையிலான சமூகவியல் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த இலவச டோல் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS