ஜார்ஜ் டவுன்,அக்டோபர் 28-
நாட்டில் உள்ள தொழிலார்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை நேரடியாக கண்டறிவதற்கு மனித வள அமைச்சு அதிகாரிகள் களம் இறங்குவர் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மனித அமைச்சின் ஆள்பல இலாகா அதிகாரிகள், நேரடியாக களம் இறங்கி, தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கண்டறிய வேண்டும் என்று உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மனித வள அமைச்சின் ஆள்பல இலாகா அதிகாரிகள், நேரடியாக களம் இறங்கி, தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கண்டறிய வேண்டும் என்று உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கில் சீனர் பேரணி மன்ற அரங்கில் மனித வள அமைச்சின் HRD Corp ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் பேசுகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.