வழக்கறிஞர் என்று ஆள்மாறாட்டம் செய்ததாக ஆடவர் குற்றச்சாட்டு

செரம்பன்,அக்டோபர் 28-

வழக்கறிஞர் மற்றும் வழக்குறைஞர் என்று கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்ததாக ஆடவர் ஒருவர் சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

45 வயது முஹம்மது சயாபிக் ஸ்டீவர்ட் அப்துல்லா என்ற அந்த நபர் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் ஆள்மாறாட்டம் செய்து வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட காலக்கட்டத்தில் இரண்டு நபர்களிடம் அவர் இந்த ஆள்மாறாட்டம் செய்து நம்பவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் தனக்க எதிரான குற்றத்தை அந்த நபர் மறுத்து விசாரணை கோரியிருப்பதால் அவரை 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

WATCH OUR LATEST NEWS