கோலாலம்பூர் ,அக்டோபர் 28-
கோலாலம்பூர், பந்தர் பாரு செரி பெட்டாலிங் – கில் ஒரு காண்டோமினியம் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 42 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 145 கிலோ எடைக்கொண்ட சியாபு மற்றும் Heroin எடைக்கொண்ட போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் லிப்டு முன்புறம் 25 மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் இயக்குநர் காவ் கோக் சின் தெரிவித்தார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 155 போதைப்பொருள் பேக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்ட்டன. இவற்றில் 115 பாக்கேட்டுகள் Syabu வகையைச் சேர்ந்த போதைப்பொருளாகும். மேலும் 40 பாக்கேட்டுகள் ஹேரோயின் போதைப்பொருளாகும் என்று காவ் கோக் சின் விளக்கினார்.
சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 1,500 வெள்ளி வாடகையில் அந்த அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.