கோலாலம்பூர் ,அக்டோபர் 28-
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் சிலாங்கூர், சுபாங், ஜாலான் கெமாஜுவான் -னில் உள்ள AEON BIG ஏயோன் பிக் பேரங்காடி மையத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 15 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க போலீசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பானுப்ரியா பாலமுருகன் என்ற அந்த இளம் பெண் காணாமல் போனதாக அன்றைய தினம் மாலை 5.32 மணிக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் மாமத் கூறினார்.
அந்த பெண் 168 சென்டிமீட்டர் உயரமும், பழுப்பு நிற கண்கள் மற்றும் நீண்ட தலைமுடியுடன் 55 கிலோ எடையும் கொண்டவர் என அவர் கூறினார்.
பாதிக்கப் பட்டவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு ஏசிபி வான் அஸ்லான் மாமத் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.