தீபாவளியை முன்னிட்டு நிதி ஒதுக்கீடு

கோலா லங்காட்,அக்டோபர் 28-

இந்த வாரம் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல மன்றம் PEKAWANIS ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 100 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 53 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,060 இந்தியர்களுக்கு பயன் பெற்று வருகின்றனர்..

தீபாவளி பண்டிகை இந்தியர்களால் மட்டுமல்ல, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பதால் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது என PEKAWANIS தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமருடின் ஷாரியின் துணைவியாருமான டத்தின் மஸ்தியானா முகமது கூறினார்.


“இன்று ஷா ஆலம், பந்திங், சுங்கை பெலேக், தஞ்சோங் சிப்பாட் மற்றும் டெங்கில் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 100 நபர்கள் உதவி பெற்றனர்.
“அது மட்டுமின்றி, யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் நிறுவனத்திடம் இருந்து 200 மாணவர்களுக்கு Back To School ஸ்கூல் திட்டத்தின் கீழ் உதவி நல்கப்பட்டது..

WATCH OUR LATEST NEWS