Pak Lon கும்பல் முறியடிப்பு, மூவர் கைது

கெடா , அக்டோபர் 28-

கெடா, கூலிம் வட்டாரத்தில் அந்நியத் தொழிலாளர்களை இலக்காக கொண்டு, தங்களை போலீஸ்காரர்கள் என்று அடையாளம் கூறிக்கொண்டு, அவர்களின் பணத்தை பறித்து வந்த பாக் லோன் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பாக் லோன் கும்பலைச் சேர்ந்த 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேலை பெர்மிட்டை சோதனை செய்வது போல் நடித்து, அவர்களிடம் பணம் பறிப்பதை இந்த கும்பல் நோக்கமாக கொண்டு செயல்பட்டுள்ளது என்று டத்தோ பிசோல் சாலே குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS