66 ஆயிரம் பேர் களத்தில் இறங்குவர்

கோலாலம்பூர், அக்டோபர் 28-

அடுத்த மாதம் இறுதி வாக்கில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 66 ஆயிரத்து 042 பேர் தயார் நிலையில் உள்ளனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்த முறை, வட கிழக்கு பருவமலை சற்று கடுமையாக இருக்கலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரச மலேசிய போலீஸ் படை, ரேலா, கடல் சார் போலீசார் உட்பட் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் நடப்பு நிலையை அணுக்கமாக கண்காணித்து வருவர் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS