முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு தகுதியில்லை

கோலாலம்பூர், அக்டோபர் 28-

சிறைச்சாலைக்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தகுதியில்லை என்று டிஏபி கெப்போங் எம்.பி. லிம் லிப் இன்ஜி இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி மோசடி குற்றவாளிகள் வீட்டுக்காவல் திட்டத்தில் இடம் பெற முடியாது. தாங்கள் புரிந்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் சிறைச்சாலையில் மட்டுமே தண்டனை அனுபவிக்க முடியும் என்று 2025 ஆம் ஆண்டு விநியோக சட்டத்திருத்தம் மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் லிம் இதனை குறிப்பிட்டார்.

மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு அரசாங்கம் மேற்கொண்ட முதலீட்டுத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் புரிந்த தலைவர்கள் சிறைச்சாலையில் கம்பிக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான செய்தியை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த எம்.பி. கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS