கோலாலம்பூர், அக்டோபர் 28-
கோலாலம்பூர் இருதய சிகிச்சைக் கழகமான IJN- னில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
துன் மகாதீர், நுரையீரலில் கிருமித் தொற்று காரணமாக கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் IJN- னில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
தற்போது குணமடைந்து வரும் துன் மகாதீர், விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக ஹாடி அவாங் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.