நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன

கோலாலம்பூர், அக்டோபர் 28-

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு சொந்தமான வாகனக் கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், இன்று நிகழ்ந்த தீ விபத்தில் அழிந்தன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் பழைய மற்றும் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்களாகும். சாலை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கோலாலம்பூர் மாநகர் மன்றம், இழுவை வண்டியின் மூலம் கொண்டு வந்து, இந்த கிடங்கில் நிறுத்தி வைத்துள்ளன.

இன்று மதியம் 12.33 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 130 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் முற்றாக அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப்டையினர் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டார் துன் ரசாக் மற்றும் செராஸ் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அதன் கோமந்தர் முகமது ஹிஸாம் மாமத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS