பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 29-
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி ஜோகூர், பாசிர் குடாங், செரி ஆலம்- மில் 7 லட்சத்து 5 ஆயிரத்து 472 வெள்ளி மதிப்புள்ள Syabu வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தியதாக நம்பப்படும் கணவன் மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மூவரும் கைது செய்யப்பட்டது மூலம் 20 பேக்கெட்டுகளில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
40 க்கும் 58 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.