Kacang Puteh வியாபாரியாக இருந்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது

கோலாலம்பூர், அக்டோபர் 29-

தம்முடைய பூர்வீகம் இந்தியா, கேரளா என்றும், தம்முடைய பெயர் இஸ்கண்டார் குட்டி என்றும், கூறி அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் தம்மை அவமதித்தது, தாம் ஒரு கச்சாங் பூத்தே வியாபாரியாக இருந்திருந்தால் அவரின் அந்த ஏளனப்பேச்சு தம்மை பாதித்து இருக்காது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

அகமட் ஜாஹிட் சீண்டிப்பார்த்து இருப்பது ஒரு காச்சாங் புத்தே வியாபாரியை அல்ல. நாட்டின் அரசியலில் உச்சப்பதவி வகித்த ஒரு தலைவருக்கு எதிராக இந்த ஏளனப்பேச்சை அவர் கட்டவிழ்த்து இருக்கிறார் என்று துன் மகாதீர் தமது தற்காப்பு வாதத்தில் தெரிவித்தார்.

தம்மை அகமட் ஜாஹிட் ஏளனப்படுத்திய போது, அதன் கடுமையை தாம் உணரவில்லை என்றும் அது வழக்கமான அரசியல் விமர்சனம் என்றும் நினைத்து தாம் அமைதியாக இருந்து விட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

ஆனால், அதன் கடுமை குறித்து பலர் தம்மிடம் தெரிவித்தப்பின்னரே அதன் சுடும் சொல்லின் கடுமையை தாம் உணர்ந்ததாக அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சாட்சியம் அளிக்கையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS