நான்கு உதவி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்

நெகிரி செம்பிலான், அக்டோபர் 30-

நெகிரி செம்பிலான், Kuala Pilahவில் உள்ள GISB Holdings Sdn Bhd உடன் தொடர்புடைய ஒரு MADRASAHவில் நான்கு உதவி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வரும் நவம்பர் 18 ஆம் தேதி நீதிமன்றம் தீர்மானித்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட அம்மூவரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் Datuk Hanif Hasan குறிப்பிடுகயில், இவ்வழக்கு தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை என்று தெரிவித்தார். நீதிபதி Datin Surita Budin, இந்த வழக்கில் முழுமையான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க நவம்பர் 18 ஆம் தேதியை முடிவு செய்தார்.
.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று, 21 வயதான Muhammad Habib Noh Mohd Zairi, 20 Muhammad Khunnais Fathie Khabil,, மற்றும் 22 வயதான Ahmad Nadzful Izham Azizan ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் 2022 முதல் 2023 வரை கோலா பிலாவில் உள்ள மதரஸாவில் 9 முதல் 11 வயதுடைய ஐந்து சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
ஒவ்வொருவருக்கும் 12,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS