அக்டோபர் 30-
தீபாவளியை முன்னிட்டு நடப்பில் இர்க்கும் விழாக்கால விலைக் கட்டுப்பாட்டினைப் பின்பற்றாத 6 வியாபாரிகள் மீது உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்த துணை அமைச்சர் Fuziah Salleh தெரிவிக்கயில், 942 பரிசோதனைகள் நடத்தப்பட்டு 440 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 900 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 28 முதல் எதிர்வரும் 3 நவம்பர் வரை அமைச்சின் சோதனையும் விலைக்கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தீபாவளி காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சு தீர்மானித்த விலைக் கட்டுபாட்டை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், பொது மக்கள் உடனடியாக அமைச்சிடம் தகவல் அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.