அக்டோபர் 30-
உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள், இன்று தொடங்கி, டிசம்பர் 31 வரையில், 100 ரிங்கிட் மதிப்பிலான புத்தகப் பற்றுச் சீட்டினைப் பெற விண்ணப்பிக்கலம் என உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்விண்ணப்பம் இன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கி இருப்பதாகவும் MySISWAPLACE இணையப் பக்கத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் அமைச்சின் கீழ் பதிந்து கொண்டு உயர்க்கல்வி நிலையங்களில் பயின்று வரும் ஒரு மில்லியனுக்கும் மேலான மாணவர்கள் இத்திட்டத்தின் வழி பயன்பெறுவர்.