கோலாலம்பூர், அக்டோபர் 30-
நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1MDB வழக்கில் 2.3 பில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டுகளில் தற்காப்பு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த விசாரணை 97 நாட்கள் நீடிக்கும் எனவும்ம் 2025 நவம்பர் வரை இவ்வழக்கு நீடிக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நஜிப்பின் வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah குறைந்தது 11 சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று உறுதிப்படுத்தினார்.
பல சாட்சிகள் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்படும் நிலையில், அதில் நஜிப்பும் உட்படுத்தப்பட இருக்கிறார். மேலும், 2025 இல் நடைபெறும் விசாரணைகளில் கூடுதல் சாட்சிகள் இடம்பெற வாய்ப்பும் உள்ளதாக கூறினார்.
நஜிப்புக்கு எதிரான 1MDB நிதி மோசடி குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு அவர் தம்மைத் தற்காக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில, நஜிப்பின் வழக்கறிஞர், Tan Sri Muhammad Shafee Abdullah, இந்த முடிவால் தமக்கு வருத்தமே என்று தெரிவித்ததுடன் அவ்வழக்கை தொடர்வதில் இருந்து தமது முயற்சியைக் கைவிடப் போவதில்லை என உறுதியளித்தார்.