சர்வதேச ஊழல் எதிர்ப்பு அகாடமியின் புதிய தலைவராக பிரதமர் துறையின் சட்ட மற்றும் சீர்திருத்தம் அமைச்சர் Datuk Seri Azalina Othman Said னின் நியமனம் மலேசியாவின் ஊழல் ஒழிப்பு விவகாரங்களுக்குப் பங்களிப்பதற்கான வாய்ப்புகளைத் திறக்கிறது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்
சர்வதேச அளவிலும் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளை உருவாக்க Datuk Seri Azalina Othman Said னின் நியமனம் பெரும் பங்காற்றும் என டான்ஸ்ரீ ஆசம் பாக்கி கூறினார்.
அசலினாவின் தலைமையின் கீழ், உலகளாவிய ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னெடுப்பதில் மலேசியாவின் நிலை கணிசமாக மேம்படும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
ஊழலுக்கு எதிராக போராடுவதில் மலேசியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை அவரது நியமனம் பிரதிபலிக்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.