கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மாற்ற நிபுணர் பேராசிரியர் Prof Dr Fredolin Tangang கூறினார்.
அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழை (MTL) வழக்கமாக கிழக்கு கடலோரம் மற்றும் போர்னியோ பகுதியில் ஏற்படுகிறது, ஆனால் அது மேற்குக் கடலோரத்தில் தீவிர வானிலைப் பருவத்தை உருவாக்கி, முந்தைய வெள்ளத்தைப்போல் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறி உள்ளார்.
வடகிழக்கு பருவமழைகாலத்தில், போர்னியோ சுழல் அடிக்கடி நிகழ்கிறது என்பதலாலும் மேலும் இந்த வானிலை அமைப்பு கிழக்கு சீன கடலில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வெப்ப மண்டலக் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கிழக்கு கடலோரத்தில் மிகவும் தீவிர மழையை உருவாக்கி வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெளிவுப்படுத்தினார்.