16 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்

கோலாலம்பூர், நவம்பர் 03-

Sungai Besiயில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் UPNM இன் ஆயுதப்படை பயிற்சியகத்தில் பயிற்சி அதிகாரியை பகடி வதைக்குட்படுத்திய சம்பவத்தில் விசாரணைக்கு உதவ , பாதிக்கப்பட்டவர் உட்பட 16 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர், Datuk Rusdi Mohd Isa 16 பேர் விசாரணை தெரிவித்தார்.

அதே சமயம் இவ்வழக்கு தொடர்புடைய மருத்துவ அறிக்கைக்குத் தமது தரப்பு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

முந்தைய தகவலின் படி, கடந்த அக்டோபர் 22ஆம் நாள், பாதிக்கப்பட்ட மாணவர் சீருடையை இஸ்தரி செய்யும்போது அவரது மார்பில் அந்த இஸ்தரியால் சூடு வைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகவும், இச்சம்அவம் அந்தமாணவர் பயிலும் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் நடந்ததாகவும் கூறப்பட்டது.

மலேசிய ஆயுதப்படை இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் கடுமையான தண்டனையோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS