செபாங் , நவம்பர் 03-
2025 சிலாங்கூருக்கு வருகை புரியுங்கள் எனும் TAHUN MELAWAT SELANGOR 2025 எனும் சுற்றுலாத் திட்டம் Surprising Selangor எனும் கருபொருளில் அமைவதோடு அதன் ஒரு பகுதியாக விளையாட்டு சுற்றுலாவும் மாநில நாட்காட்டியில் இடம்பெற இருப்பதாக அம்மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
குறிப்பாக சிலாங்கூரில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள உள்ள நிலையில், சைக்கிளோட்டத்தையும் Pickleball விளையாட்டையும் அந்தப் பட்டியலில் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்
ஜுக்ரா, கோலா குபு பாரு ஆகிய வட்டாரங்களில் paraglidingக்கான இடவசதியும் இருப்பதாகத் தெரிவித்த அவர், 2025ல் 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு இத்திட்டம் நடப்புக்கு வருவதாகக் குறிப்பிட்டார்
கடந்த 2023ல் 6.45 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை மேற்கொண்டதைத் தொடர்து 2024ல் 7 மில்லியன் சுற்றுப் பயணிகளை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது என அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.