ஜொகூர் , நவம்பர் 03-
உயர் திறன் தொழிலாளர்களுக்கு 4,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரையில் தொடங்கும் பிரீமியம் ஊதியத்தை வழங்க மலேசியாவில் முதல் மாநிலமாக ஜோகூர் முன்வந்துள்ளது என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
ஜோகூர் திறன் மேம்பாட்டு மன்றம் JTDC உருவாக்கப்பட்டு, ஒரு லட்சம் உயர் திறன் வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. தொழில்நுட்பம், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், அது சார்ந்த தொழில்துறை, அத்துறை சார்ந்து வேலை தேடுபவர்கள் ஆகியோரை இணைக்கும் ஒரு மையமாக செயல்பட உள்ளதாக துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
டிப்ளோமா, இளங்கலைப் பட்டதாரிகளுக்கு பிரீமியம் சம்பளத்தை வழங்க இருப்பதால், ஜோகூர் மாநிலம் சிங்கப்பூரின் உயர்ந்த குறைந்தபட்ச சம்பள நிலைக்கு ஈடுகொடுத்து நிற்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்
இதனால், உயர் திறன் தொழிலாளர்களை JTDC உருவாக்க உதவும் என்றார்.