தெலுக் இந்தான்,நவம்பர் 03-
தெலுக் இந்தான், கம்பங் பஹாகியா இரும்பு பாலத்தின் சுவரில் சாயத்தால் கிறுக்கியக் குற்றத்திற்காக 44 வயது ஆடவர் கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
சுற்று வட்டார மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலிசார் அந்த ஆடவரைக் கைது செய்ததாக கீழ்ப்பேரா மாவட்டக் காவல் துறை தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் அஹ்மத் அட்னான் பஸ்ரி தகவல் வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட போது, அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாகவும் பவருடன் 4 வண்ண சாய கொள்கலன்களைப் பறிமுதல் செய்ததாகவும் அஹ்மத் அத்னான் பஸ்ரி தெரிவித்தார்.
கடந்த 2012 முதல் 2022 வரையில் 8 குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ள அந்த ஆடவரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்யப்படு வருவதகவும் அவர் குறிப்பிட்டார்.அஹ்மத் அத்னான் பஸ்ரி