அலோர் செட்டார்,நவம்பர் 03-
அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய கோலா கெடா நில உரிமை மோசடி விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது கெடா மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம். இதன் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை விசாரணை செய்ய ஆணையம் அழைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தின் தகவல் தெரிவிக்கின்றது.
விசாரணைக்கு உதவ சில முக்கிய ஆவணங்க கிடைத்திருப்பதாக BERITA HARIAN செய்தி வெளியிட்டுள்ளது. மிக முக்கியமாக போலி ஆவணங்களின் பயன்பாடும் நில உரிமை மாற்றத்தில் நிகழ்ந்த ஊழல் நடந்திருப்பதும் விசாரணையின் மையப்புள்ளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கெடா மாநில இயக்குநர் அஹ்மத் நிஜாம் இஸ்மாயில் ஐத் தொடர்பு கொண்டபோது, 2009ஆம் ஆண்டு SPRM சட்டம் பிரிவு 17(a) இன் கீழ் விசாரணை நடந்து வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.