JPJ 3,722 Perodua Alza, Aruz, Honda CB350RS ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது

புத்ராஜெயா,நவம்பர் 03-

Perodua Alza, Aruz வகை கார்கள், Honda CB350RS வகை மோட்டார் சைக்கிள்கள் உட்பட மொத்தம் 3,722 வாகனங்களை திரும்பப் பெறக் கோரியுள்ள்து மலேசியா சாலை போக்குவரத்து துறை JPJ.

Perodua Alza, Aruz கார்களில் பிரதான விளக்கின் உயரம் ஒழுங்கு முறையில் பிழையும் Honda CB350RS மோட்டார் சைக்கிள்களில் வேகம் கணிப்பதில் சிக்கல்களும் ABS பிரேக் அமைப்பு முறையில் கோளாறு இருப்பதையும் அத்துறை சுட்டிக் காட்டி இந்த ஆணையை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்;ள இந்தக் கோளாறுகள் இருக்கின்ற வாகனங்களின் பரி பாகங்கள் மாற்றும் செலவை அவற்றின் தயாரிப்பு நிறுவனங்களான Perodua Manufacturing Sdn Bhdஉம் Boon Siew Honda Sdn Bhd.உம் ஏற்றுக் கொள்ளும்.


சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் U-First இணையத்தலத்திலோ அல்லது U-First செயலிவாயிலாகவோ அல்லது Perodua, Boon Siew Honda நிறுவனங்களைத் தொடர்பு கொண்டோ மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என அறிவிவுறுத்தப் பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS