கோலாலம்பூர், நவம்பர் 03-
2025 பட்ஜெட்டின் கீழ், இ-விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இருந்து 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புதிய இ-விளையாட்டு மைதானத்தைக் கட்ட பயன்படுத்தப்படும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
மேலும் 10 மில்லியன் நிதியை இ-விளையாட்டு பயிற்சிக்கும் தொடர்புடைய இதர நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
இதனால், அத்துரை சார்ந்த தொழிலும் வளர்ச்சி அடையும் என்றார்.