குவா முசாங்,நவம்பர் 04-
தேச நிந்தனைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தமக்கு எதிரான வழக்கு விசாரணையை குவா முசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து கிளந்தான், கோத்தா பாரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
இவ்வழக்கு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போது வழக்கு விசாரணையை கோத்தா பாரு, உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான அவசியத்தை முகைதீன் யாசின் வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.
கூட்டரசு சட்டங்களை மேற்கோள்காட்டி, நீதிபதி நிக் மோஹட் தரமிஜியே நிக் மோஹட் ஷுக்ரி முன்னிலையில் முகைதீன் வழக்கறிஞர்கள் குழுவினர் தங்கள் வாதத்தொகுப்பை முன் வைத்தனர்.