பத்து பஹாட்,நவம்பர் 04-
ஜோகூர், பத்து பஹாட், சுங்கை சிம்பாங் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரை தேடும் பணியை, மீட்புப்படையினர் இன்று இரண்டாவது நாளாக மேற்கொள்கின்றனர்.
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மற்றும் செருப்பை அடிப்படையாக கொண்டு அந்த நபர் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் , நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆற்றில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருலானுார் தெரிவித்துள்ளார்.