கோலாலம்பூர், நவம்பர் 04-
ஹோட்டல் முன்புறம், ஒரு மாற்றுத்திறனாளியான e hailing ஓட்டுநரை தாக்கியதாக பிரமுகர் ஒருவரின் மெய்க்காவலர், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
காது கேளாதவரான அந்த நபர், அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில், அந்த மெய்காவலர் மீது குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மே 28 ஆம் தேதி செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டுள்ளார்.