ஈப்போ , நவம்பர் 04-
நபர் ஒருவருக்கு நோக்கமின்றி, மரணம் விளைத்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டாயிரத்து 500 வெள்ளி அபராதம் விதித்தது.
சிதி நூரிதா ஜூம்லி என்ற 24 வயதுடைய அந்த மாது, தனக்கு எதிரான அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் இரண்டு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் சிட்டி நோரா ஷெரீப் தீர்ப்பளித்தார்.
கடந்த அக்டேபார் 25 ஆம் தேதி மாலை 4.20 மணியளவில் ஈப்போ,க்ளெபாங்-கில் ஒரு பேரங்காடி மையத்தின் முன்புறம் அந்த மாது, இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் பிடிப்படாமல் இருந்து வரும் ஒரு நபருடன் சேர்ந்து, 64 வயது அப்துல் கமர் மாட் சரின் என்பவருக்கு நோக்கமின்றி மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்ட்ததின் கீழ் அந்த மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.