கோலாலம்பூர், நவம்பர் 04-
NGV எனப்படும் இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்குரிய அனைத்து வாகனங்களுக்கும் அடுத்த ஆண்டில் அனுமதியில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
NGV வாகனங்களை பதிவு செய்வதற்ககோ அல்லது அவ்வகை வாகனங்களுக்கு உரிமை வழங்குவதற்கோ அடுத்த ஆண்டு முதல் அனுமதியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
NGV வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இம்முடிவு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.
NGV எரிவாயுவை வழங்கி வரும் நாட்டின் பிரதான பெட்ரோலிய நிறுவனமான Petronas, NGV விநியோகத்தை கட்டம் கட்டமாக குறைத்து வருகிறது. அடுத்த ஆண்டில் அதன் NGV சேவை முடிவுக்கு வருவதையும் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.