வர்த்தகர் மீது கடத்தல் குற்றச்சாட்டு

ஜொகூர் , நவம்பர் 04-

கடந்த மாதம் 2 கோடி வெள்ளி பிணைப்பணம் கோரி, ஆடவர் ஒருவரை கடத்தியதாக வர்த்தகர் ஒருவரும், இரண்டு வியட்நாமிய பிரஜைகளும் ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

46 வயது Chong Shih Ming என்ற அந்த வர்த்தகர், 39 மற்றும் 29 வயதுடைய இரண்டு வியட்நாமிய பிரஜைகளுடன் கூட்டு சேர்ந்து, இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி காலை 5 மணியளவில் ஜோகூர்பாரு, Jalan Straits View சாலையில் அந்த மூவரும் இக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS