அண்ணி மானபங்கம், கொளுந்தன் கைது

ஜெம்போல் , நவம்பர் 04-

தனது அண்ணியை மானப்பங்கம் செய்ததாக கூறப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தனிமையில் இருந்த 26 வயதுப் பெண்ணிடம், 24 வயது நபர், ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் ஒரு பால்மர வெட்டுத்தொழிலாளியான அந்த நபர்,பெல்டா பலோங்-கில் கைது செய்யப்பட்டதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் Suprintenden Hoo Chang Hook தெரிவித்தார்.

போதைப்பொருள் உட்கொண்டதாக நம்பப்படும் அந்த நபர், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதி பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS