மலேசியர்கள் யாரும் பாதிக்கவில்லை

ஸ்பெயின், நவம்பர் 04-

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் கனத்த மழையில் ஸ்பெயினின் பல ஊர்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தங்கியுள்ள மலேசியர்கள், அந்த நாட்டின் உத்தரவை பின்பற்றி நடக்குமாறு விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS