கிளந்தான் அரசாங்கம் தலையிடவில்லை

கிளந்தான், நவம்பர் 04-

கடந்த வெள்ளிக்கிழமை சுங்கை கோலக்-கில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் தொடர்பில் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு பெண் பாடகி உட்பட 6 மலேசியர்களின் விவகாரத்தில் கிளந்தான் அரசு தலையிடாது என்று துணை மந்திரி பெசார் Datuk Dr Mohamed Fadzli Hassan தெரிவித்துள்ளார்.

இதில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு இது படிப்பிணையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தை பேண வேண்டும். மக்களுக்கு எவ்வளவு அறிமுகமாகியிருந்தாலும் சுய ஒழுக்கம் இல்லையென்றால், இத்தகைய பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று Dr Mohamed Fadzli குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS