நிபோங் தெபால், நவம்பர் 04-
நிபோங் தெபால், பத்து கவண், சிம்பாங் அம்பா– டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாடிகளைக்கொண்ட கடை வீடொன்று அழிந்தது.
இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது. Pusat Perniagaan Vorteks- வர்த்தகத் தளத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் காலை 9.39 மணிக்கு தீயணைப்பு படையினர் அவசர அழைப்பைப்பெற்றதாக பத்து கவண நிலையத்தின் Komander Noor Asfariza Mohamad Abdul Kadir தெரிவித்தார்.
மின்னியல் பொருட்கள் விற்பனைக் கடையான அந்த கடை வீட்டின் மூன்றாவது மாடி, 80 விழுக்காடு அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.