14 வயது சிறுவன் படகுத்துறையில் விழுந்து மரணம்

முவார், நவம்பர் 04-

Autisme பாதிப்புக்கு ஆளான 14 வயது சிறுவன் ஒருவன், முவார் மரீனா பே படகுத்துறையில் நீரில் மூழ்கி மாண்டான்.

இச்சம்பவம் நேற்று முன் தினம் நிகழ்ந்ததாக Muar மாவட்ட போலீஸ் தலைவர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

அந்த சிறுவனின் காது கேளாத தந்தை செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து சிறுவனை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தங்களுக்கு தெரியாமலேயே அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்ற போது, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் அந்த சிறுவனின் உடல் படகுத்துறையில் கண்டு பிடிக்கப்பட்டதாக Raiz Mukhliz குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS