குவந்தான், நவம்பர் 04-
வேகக்கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று, கடையை மோதி தள்ளியதில் மூவர் காயமுற்றனர்.
இச்சம்பவம், இன்று மாலை 4 மணியளவில் குவந்தான், ஜலான் கம்பாங்- பத்து 8 னில் நிகழ்ந்தது.
தீயணைப்பு, மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் காயமுற்றவர்கள், பொது மக்களால் காப்பாற்றப்பட்டனர்.
இதில் லோரி ஒட்டுநர் உட்பட மூவர் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் Ismail Abdul Ghani தெரிவித்தார்.