மின்யாக் தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம்: விரைந்து பரிசீலனை செய்வீர்

உலுசிலாங்கூர், நவ.6-


சிலாங்கூர், பத்தாங் பெர்ஜுந்தையில் செயல்பட்ட மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமத்தை புதிய பகுதிக்கு இடம் மாற்றி, புதிய இடத்தில் அப்பள்ளியை நிறுவுவது மீதான திட்டத்தை உடனடியாக பரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சை, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியப்பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமத்தை, உலு சிலாங்கூர் நாடாளுன்றத் தொகுதிக்கு உட்பட்ட செராண்டாவிற்கு மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட திட்டம், கடந்த 14 ஆண்டு காலமாக கிடப்பில் இருப்பதாக டாக்டர் சத்தியப்பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பள்ளியின் உரிமத்தை செராண்டாவிற்கு இடம் மாற்றி, சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பள்ளியை நிறுவதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலம், பொருத்தமான இடம் அல்ல என்று டாக்டர் சத்தியப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் புதிய இடத்தில் புதிய சூழலில் கட்டப்படவிருக்கும் தமிழ்ப்பள்ளி, அரசாங்கத்தின் நேரடிப் பார்வையில், அரசு முழு உதவிப்பெற்றப் பள்ளியாக நிர்மாணிக்கப்படுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அந்த பள்ளிக்கு அரசுப்பள்ளி என்ற எஸ்.கே. அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் சத்தியப்பிரகாஷ் கோரியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS