ஷங்காய், நவ.6-
சீனாவிற்கு நான்கு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வருகையின் மூன்றாவது நாளான இன்று ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்களை சந்தித்தார்.
ஷங்காய்யில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான செபங்வே கெட்பிட்டல் மற்றும் என்.ஆர்.எல். கெப்பிட்டல் போன்ற சக்தி வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார்.
பிரதமரின் சீன நாட்டுப்பயணமானது, முழுக்க – முழுக்க அந்நாட்டு முதலீட்டாளர்களை கவர்வதாகும்.
குறிப்பாக, மலேசியாவின் பொருளியல் வளர்ச்சியை உயர்த்துவதற்கு சீன நாட்டைச் சேர்ந்த ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்ளை சந்தித்து, முதலீடுகளை கவர்வதாகும் என்று சீனாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முகமட் விளக்கம் அளித்தார்.