சிரம்பான், நவ.19-
இஸ்லாமிய சட்டத்திற்கு முரணாக மாறுப்பட்ட கோட்பாடுகளை போதித்த குற்றத்திற்காக சிங்கப்பூரியர் ஒருவருக்கு சிரம்பான் ஷரியா நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.
60 வயது இட்ரிஸ் அமி என்ற அந்த சிங்கப்பூரியர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 6 மாத சிறைத் தண்டனையுடன் 6 ஆயிரம் வெள்ளி அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி சுல்பிகிர் யாசோ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.