குழந்தை சித்ரவதை, முன்னாள் பணிப்பெண்ணுக்கு 6 மாத சிறை

சிரம்பான், நவ. 19-


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏழு மாத கைக்குழந்தையை சித்ரவதை செய்த குற்றத்தைப் ஒப்புக்கொண்ட முன்னாள் குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத்தண்டனையும், பத்து ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.

27 வயது சைடதுல் சயாபினாஸ் சடான் என்ற அந்த முன்னாள் பணிப்பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சிரம்பான் 2, Garden Avenue-வில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் குற்றஞ்சாட்டப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS