தெமர்லோ, நவ. 19-
மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதம் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெமர்லோ உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
நீதிபதியின் சேம்பரில் நடைபெற்ற விசாரணையில் வழக்கின் வாதியான P. ராமன் மற்றும் பிரதிவாதியான டத்தோ க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதங்களை செவிமடுத்தப்பின்னர்
நீதிபதி ரோஸ்லான் மாட் நோர் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ராமனின் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.
ஆலயத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தலைவர் தேர்தல் சர்ச்சை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் பூர்வாங்க விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ரோஸ்லான், அதற்கு முன்னதாக, ஆலயத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் டிசம்பர் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தவு பிறப்பித்துள்ளார்.