போர்ட்டிக்சனின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சுற்றுலா பெருவழித்திட்டம்

போர்ட்டிக்சன், நவ.19-


போர்ட்டிக்சனின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலா மற்றும் சேவை பெருவழித்திட்டத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசாங்கமும், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கமும் திட்டம் கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

இந்த சுற்றுலா பெருவழித்திட்டத்தை உருவாக்குவதற்கு பிற அமைச்சுக்களுடன் இணைந்து பிரதான வரைப்படம் ஒன்று உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

போர்ட்டிக்சனில் சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை உண்டு பண்ணும் வகையில் இந்த சுற்றுலா பெருவழித்திட்டம் அமைந்து இருக்கும் என்று ரபிஸி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS