ரியோ டி ஜெனிரோ, நவ. 19-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பிரேசில் பயணம் மலேசியாவிற்கான புதிய பொருளாதார வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன.
குறிப்பாக செமிகண்டக்டர் தொழில்துறையில் மலேசியாவிற்கு புதிய வாய்ப்புகள் கண்டறிப்பட்டுள்ளன. லத்தின் அமெரிக்க நாடான பிரேசிலில் வலுவான செமிகண்டக்டர் சுற்றுச்சூழலை உருவாக்கி, மலேசியாவிற்கும், பிரேசிலுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை இரு நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன.
உலகப் புகழ்பெற்ற செமிகண்டக்டர் மையமாகவும், அதன் விரிவான சுற்றுச்சூழல் அமைப்பாகவும், உலகில் ஆறாவது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாகவும் விளங்கி வரும் மலேசியாவுடன் இணைந்து செமிகண்டாக்டர் உற்பத்தித்துறையில் ஈடுபடுவதற்கு பிரேசில் ஆர்வம் காட்டியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.