வீட்டு தடுப்புக்காவல் தண்டனை முறை மிக கவனமாக ஆராயப்பட வேண்டும்

கோலாலம்பூர், நவ.19-


அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வீட்டு தடுப்புக்காவல் தண்டனை முறை மீதான புதிய சட்டத்திருத்தம், மிக கவனமாக ஆராயப்பட வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அந்த தண்டனை முறை சீராக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அந்த உத்தேச சட்டப்பரிந்துரை மிக கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐஜிபி வலியுறுத்தினார்.

சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இட நெரிசலை சமாளிக்கும் நோக்கில் வீட்டுத் தடுப்புக்காவல் தண்டனை முறை மீதான சட்டப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 74 ஆயிரம் கைதிகள் மட்டுமே நிறைவு செய்யக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது 87 ஆயிரம் கைதிகள் உள்ளனர்.

சிறைச்சாலை இலாகா எதிர்நோக்கியுள்ள இட நெரிசல் பிரச்னையை அரச மலேசியப் போலீஸ் படை கொள்கை அளவில் புரிந்துக்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தாலும் வீட்டுத் தடுப்புக்காவல் தண்டனை முறை மீதான உத்தேச சட்டம், மிக கவனமாக ஆராயப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நிலையில் போலீஸ் படை உள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருடின் விளக்கினார்.

குறிப்பாக, ஒட்டுமொத்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குமுறையை உறுதி செய்யும் வகையில் வீட்டுக்காவல் தண்டனை முறையின் அமலாக்கம் சீராக நடைபெறுவதை எல்லா நிலைகளிலும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று ஐஜிபி கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS